சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

ஏரல், அக். 8: சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் தொடர்பு துறை சார்பில் தேசிய கருத்தரங்கு விழா நடந்தது. சாயர்புரம் சேகரத் தலைவர் மனோகர் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்து பேசினார். முதல்வர் ஜாபிந்த் முன்னிலை வகித்தார். துறை தலைவர் செல்வரதி பொன்மலர் வரவேற்றார். பேராசிரியை ஜாஸ்மின் பேசினார்.கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர் லிவிங்ஸ்டன், வளாகம் பொறியாளர் தீபராஜ், சாயர்புரம் சேகர பொருளாளர் ஜான்சன், எல்சிஎப் பொருளாளர் அலெக்சாண்டர் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்