சான்றிதழ், உடற்தகுதி தேர்வில் 317 பேர் தேர்ச்சி இன்று 2வது கட்ட உடற்தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்பு வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் 2ம் நிலை காவலர்களுக்கான

வேலூர், பிப்.10: வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் 2ம் நிலை காவலர்களுக்கான சான்றிதழ், உடற்தகுதி தேர்வில் 317 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு இன்று 2வது கட்ட உடற்தகுதி தேர்வில் பங்கேற்க கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3,552 இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர், சிறைக்காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 295 மையங்களில் நடந்தது. மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 பேர் தேர்வு எழுதினர். 66 ஆயிரத்து 908 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில் 98 ஆயிரத்து 226 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் வேலூர் மாவட்டத்தில் இருந்து 912 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இவ்வாறு தேர்ச்சி பெற்ற 2ம் நிலை காவலர்களுக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு 460 பேருக்கு 6ம் தேதி நடந்தது. இதில் 362 பேர் கலந்து கொண்டனர். 98 பேர் வரவில்லை. இவர்களில் 259 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு 8ம் தேதி 2ம் கட்ட உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் 256 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கயிறு ஏறுதல், நீளம், உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் என உடற்தகுதி தேர்வு நடந்தது.
அதேபோல் 7ம் தேதி ஒத்திவைக்கப்பட்டவர்களுக்கு முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு நேற்று நடந்தது. எஸ்பி மணிவண்ணன் தலைமையில் நடந்தது. இந்த தேர்வு பணியில் 93 போலீசார் ஈடுபட்டனர். 458 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 85 பேர் கலந்து கொள்ளவில்லை. 373 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பல்வேறு உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் 317 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு இன்று 2வது கட்ட உடற்தகுதி தேர்வு நடக்க உள்ளது. அதற்காக அவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்