சாத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

விருதுநகர், பிப். 16: சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஓ.மேட்டுப்பட்டியில் ரூ.42.65 லட்சம் மதிப்பில் கிராம செயலகம் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும்,

ஓ.மேட்டுப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும், ஓ.மேட்டுப்பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பில் மாணவர்களுக்கான மிதிவண்டி நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் மேட்டமலை ஊராட்சி, மடத்துக்காடு கிராமத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.78 லட்சம் மானியத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்வரன், காமேஸ்வரி, பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related posts

கே.ஜி.கண்டிகை வாரசந்தை மைதானத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்றுநோய் அபாயம்: பொதுமக்கள் அச்சம்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்கள் ரத்து