சாத்தான்குளம் ஜிஹெச்சில் நோயாளிகளை அலைக்கழிக்கும் செவிலியர்கள்

சாத்தான்குளம், ஜூலை 28: சாத்தான்குளம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆத்திகுமாரை, பேரூராட்சி முன்னாள் தலைவரும், மாவட்ட தமாகா மகளிரணி தலைவியுமான தங்கத்தாய் சந்தித்து மனு அளித்தார். அதில், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை தாலுகா தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு தாலுகா அளவில் இருந்து ஏராளமானோர் புறநோயாளிகளாகவும், உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையில் உள்ள செவிலியர் கண்காணிப்பாளர், உள்நோயாளிகளிடமும், புறநோயாளிகளை முறையாக கவனிக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருகிறார். நோயாளிகள் அவசர சிகிச்சையில் இருந்தாலும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாமல் செல்போனில் பேசுவதையே ஆர்வம் காட்டுகிறார். இதனை கேட்டால் வாக்குவாதம் செய்கிறார். எனவே நோயாளிகளை கவனிக்காமல் செயல்படும் செவிலியர் கண்காணிப்பாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருக்கும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை உரிய முறையில் கவனிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செவிலியர்களின் இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்தால் தமாகா சார்பில் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அப்போது தமாகா நிர்வாகிகள் ஐயப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது