சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

 

தொண்டி. ஜூலை 17: தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளி மாணவர்கள் இருவர் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். இவர்களை பாராட்டி கேடயம் வழங்கும் நிகழ்வு தமுமுக சார்பில் நடைபெற்றது. தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளி இரண்டாம் வருப்பு மாணவி ஆதிஃபா இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தமிழ் நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை 19 நொடிகளிலும், இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களை 16 நொடிகளிலும், 247 தமிழ் எழுத்துக்களை 53 நொடிகளிலும் கூறி ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவரை பாராட்டும் நிகழ்வு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று பள்ளியில் நடைபெற்றது. தமுமுக தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெயினுலாப்தீன் தலைமையில் மாநில செயலாளர் சாதிக்பாட்சா முன்னிலையில் நடைபெற்றது. கிளை தலைவர் காதர் வரவேற்றார். மமக மாவட்ட துனை செயலாளர் தொண்டி ராஜ், பரக்கத் அலி, மைதீன், பொருளாளர் ஹம்மாது, கவுன்சிலர் பானு உட்பட பலர் கலந்து கொண்டார். தலைமை ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார். இதேபோல் 2 நிமிடத்தில் 50 திருக்குறள் சொல்லி சாதனை படைத்த மாணவன் ராகுலை பாராட்டி கேடயம் வழங்கினர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை