சாக்லெட் ராஸ்பெர்ரி கேக்

செய்முறை: முதலில் ஓவனை 160 டிகிரி செல்சியஸில் சூடேற்ற வேண்டும். பின் ஒரு பேனில் வெண்ணெய், தண்ணீர், சர்க்கரை, கொக்கோ பவுடர் மற்றும் டார்க் சாக்லெட் சேர்த்து, அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து கொதிக்க விட வேண்டும். கலவையானது கொதிக்கும் போது, கட்டி சேராத வண்ணம் கிளறி விட்டு, பின் அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும். மிகவும் அவசரமாக கேக் செய்ய வேண்டு மானால், இறக்கி வைத்துள்ள பேனை குளிர்ச்சி யான நீரில் வைத்து குளிர வைக்கலாம். கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதில் பேக்கிங் சோடா, மைதா சேர்த்து நன்கு கிளறி, பின் சிறிது ராஸ்பெர்ரி சேர்த்து பிரட்ட வேண்டும். அடுத்து வெண்ணெய் தடவி வைத்துள்ள பேக்கிங் பேனில், மைதா கலவையை ஊற்றி, அதன் மேல் சிறிது ராஸ்பெர்ரியை தூவி, ஓவனில் வைத்து 80-90 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும். பின் அதனை இறக்கி குளிர வைத்து, ஒரு தட்டில் மாற்றிக் கொண்டால், சுவையான சாக்லெட் ராஸ்பெர்ரி கேக் ரெடி!…

Related posts

பன்னீர் அல்வா

முட்டை இட்லி உப்புமா

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி