சாக்கோட்டையில் இலவச சித்த மருத்துவ முகாம்

கும்பகோணம்: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, கும்பகோணம் சித்த மருத்துவ பிரிவு மற்றும் கும்பகோணம் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம், னிவாச ராமானுஜ மையத்தின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் சாக்கோட்டையில் நடைபெற்றது. பேராசிரியர் கணேசன் வரவேற்றார். சித்த மருத்துவர் பி.ஜி.சிகா கவாதி பொதுமக்களுக்கு சித்த மருத்துவத்தின் சிறப்பை எடுத்துக்கூறி சிகிச்சையளித்தார். மருந்தாளுநர் மீனாட்சி சித்த மருந்துகள் மற்றும் கபசுரக்குடிநீர் சிறப்பை விளக்கினார். முகாமில் மூட்டு வலி, ஒற்றைத்தலைவலி, சுரம், நாள்பட்ட இருமல், வயிற்று உபாதைகள், தோல் நோய்கள் முதலிய பல நோய்களுக்கு சிகிச்சையும், மருந்துகளும் வழங்கப்பட்டது. இதில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 90 பேர் பயனடைந்தனர். முகாமில் பொதுமக்களுக்கு மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பேராசிரியர் வெங்கடேஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மருந்தாளுநர் மீனாட்சி, கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்கள் கணேசன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்