சாக்கு மூட்டைகளில் 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது

கரூர், ஜூலை 12: கரூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கார்த்திக்கேயன் மற்றும் போலீசார் துரைசாமி, ரமேஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள துளசிகொடும்பு பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, அந்த வாகனத்தில் 55 கிலோ எடை கொண்ட 11 வெள்ளை நிற பாலிதீன் சாக்கு மூட்டைகளில் இருந்த 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக, திண்டுக்கல்லை சேர்ந்த குபேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்து, அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து