சாக்கடையில் நனைத்தால் சந்தோஷம் மலருமாம் துடைப்பத்தால் அடித்து கொள்ளும் விநோத திருவிழா

ஆண்டிபட்டி :தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் கடைசி நாளான நேற்று ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமத்தில் உள்ள மாமன், மைத்துனர்கள் மாறி மாறி துடைப்பத்தால் அடித்துக்கொண்டனர். அடிப்பதற்கு முன்பாக துடைப்பத்தை சாக்கடை நீரிலும், சேறு மற்றும் சகதியிலும் நனைத்துக் கொண்டு ஒருவருக்ெகாருவர் அடித்துக்கொண்டனர். மேலும் சிலர் சேற்றிலும், சகதியிலும் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் துடைப்பத்தால் அடிவாங்கினர். இந்த விநோத திருவிழாவை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். துடைப்பத்தை சாக்கடையில் நனைத்து தாக்கிக் கொள்வதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் என்றும், பிரிந்த உறவுகள் மீண்டும் மலரும் என்றும் கிராம மக்கள் நம்புகின்றனர்….

Related posts

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் காலி பணியிடம் எத்தனை?.. ஐகோர்ட் கிளை