சவேரியார் ஆலய கொடியேற்று விழா

மானாமதுரை, நவ.30: மானாமதுரை அருகே சவேரியார்பட்டினத்தில் உள்ள கேட்டவரம் தரும் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு பங்குத்தந்தை ரெமிஜியஸ் சவேரியார் உருவம் பொறித்த கொடியை அர்ச்சித்து கொடியேற்றி வைத்தார். பின்னர் பங்குத்தந்தை ரெமிஜியஸ், பங்குத்தந்தை புஷ்பராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். டிசம்பர் 2ம் தேதி புனித சவேரியார் ஆண்டு பெருவிழா நடைபெறும். டிசம்பர் 3ம் தேதி விழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை புஷ்பராஜ் தலைமையில் அமலவை அருட்சகோதரிகள், கிராமமக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Related posts

சங்கரன்கோவில் நகராட்சியில் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்பு

அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கல்

சேரன்மகாதேவியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் உவரி கடலில் விஜர்சனம்