சவுத்என்ட் சர்க்கிளில் கேசரி சிங்க சிலை

பெங்களூரு: பெங்களூரு எடியூரு வார்டு சவுத் என்ட் சர்க்கிள் மற்றும் ஆறுமுகம் முதலியார் சர்க்கிள் ஆகிய இரண்டு இடங்களில் மாநகராட்சி சார்பில் 12 அடி உயரத்தில் கேசரி சிங்க சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.2.5 லட்சம் செலவிலான இந்த சிலைகளை வருவாய்த்துறை அமைச்சர் அசோக், பாஜ மேலவை உறுப்பினர் லெஹர் சிங் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். பெங்களூரு மாநகராட்சி ஆளுங்கட்சி மாஜி தலைவரும் தெற்கு மாவட்ட பாஜ தலைவருமான என்ஆர் ரமேஷ், மாஜி கவுன்சிலர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். முன்னதாக அமைச்சர் அசோக் கூறுகையில், தென்னிந்தியாவில் சிறந்த வார்டு என்ற சிறப்பை எடியூரு வார்டு பெற்றுள்ளது. திடக்கழிவு மேலாண்மையில் முதன்மையாக திகழும் எடியூரு வார்டில் பயோ காஸ் மூலமாக  தெருவிளக்குகள் ஒளிர்கின்றன. எடியூரு வார்டில் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிலையும் எழிலுடன் அமைந்துள்ளது,என்றார்….

Related posts

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு