சவுகார்பேட்டையில் உரிய ஆவணமில்லாத ₹1 கோடி சிக்கியது

சோழிங்கநல்லூர், மே 15: சவுகார்பேட்டையில், போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹1 கோடி சிக்கியது. சென்னை சவுகார்பேட்டை பகுதியில் கொத்தவால்சாவடி போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக மொபட்டில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். மேலும், மொபட்டின் டிக்கியை திறந்து சோதனை செய்தபோது கட்டுக் கட்டாக பணம் இருந்தது. விசாரணையில், அண்ணாநகரை சேர்ந்த அப்துல் ஹஜா (23), மேடவாக்கம் குட்டியப்பன் தெருவைச் சேர்ந்த தனசேகர் (43) ஆகியோர் என்பதும், உரிய ஆவணமின்றி ₹1 கோடி கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த ₹1 கோடியை பறிமுதல் செய்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அப்துல் ஹஜா, தனசேகர் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்