சவாரி அழைத்து சென்று பயணியிடம் நகை பறித்த ஆட்டோ டிரைவர் கைது

துரைப்பாக்கம்: எண்ணூரை சேர்ந்தவர் ஜெயந்தி (55). இவர், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் எண்ணூரில் இருந்து திருவான்மியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மாநகர பேருந்தில் ஏறினார். அப்போது, பேருந்தில் ஜெயந்தி அயர்ந்து தூங்கியதால் கேளம்பாக்கம் வரை சென்றது தெரிந்தது. அங்கு, இறங்கியுள்ளார். பின்னர், அங்கிருந்து திருவான்மியூருக்கு செல்வதற்காக ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆட்டோ கிழக்கு கடற்கரை சாலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவில் பயணம் செய்ய  700 ரூபாய் தர வேண்டும் என டிரைவர் கூறியுள்ளார். அதற்கு, ஜெயந்தி 150 ரூபாய் மட்டுமே உள்ளதாக கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், ஈஞ்சம்பாக்கம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜெயந்தியை மிரட்டி, அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அதே இடத்தில் இறக்கிவிட்டு தப்பியுள்ளார். பின்னர், ஜெயந்தி நடந்து சென்று அருகேயுள்ள அக்கரை செக்போஸ்ட்டில் பணியில் இருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் ஜெயந்தியை அங்கிருந்து தங்களுடைய வாகனத்தில் அழைத்துக் கொண்டு சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, செம்மஞ்சேரி ஆட்டோ நிறுத்தத்தில் பார்த்தபோது தன்னிடம் நகை, செல்போன் பறித்த ஆட்டோ டிரைவரை ஜெயந்தி அடையாளம் காட்டினார். போலீசார் நடத்திய விசாரணையில் சோழிங்கநல்லூர், ஏரிக்கரையை பகுதியை சேர்ந்த அஜித் (22) என்பதும் ஜெயந்தியிடம் கைவரிசை காட்டியதும் உறுதியானது. இதையடுத்து, அஜித்தை கைது செய்த போலீசார் நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்….

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு