சவரனுக்கு 160 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 160 குறைந்தது.தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. கடந்த 2ம் தேதி ஒரு சவரன் தங்கம் ₹36,192க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 3ம் தேதி ₹36,256, 4ம் தேதி 36,296, 5ம் தேதி 36,336, 7ம் தேதி 36,360, 8ம் தேதி 36,464, 9ம் தேதி 36,672, 10ம் தேதி 36,808, 11ம் தேதி 36,808, 12ம் தேதி 36,880க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை(13ம் தேதி) தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் கிராமுக்கு 105 அதிகரித்து ஒரு கிராம் 4,715க்கும், சவரனுக்கு ₹840 அதிகரித்து ஒரு சவரன் 37,720க்கும் விற்கப்பட்டது. சவரன் ₹38 ஆயிரத்தை நெருங்கி வந்தது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 10 நாட்களில் மட்டும் சவரன் ₹1,528 உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விலை உயர்வுக்கு ரஷ்யா-உக்ரைன் இடையே போர் மூளும் சூழ்நிலை தான் காரணம் என்று கூறப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும்.ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு 28 குறைந்து ஒரு கிராம் 4,687க்கும், சவரனுக்கு 224 குறைந்து ஒரு சவரன் 37,496க்கும் விற்கப்பட்டது. மாலையில் காலையில் விற்பனையான விலையை விட தங்கம் விலை அதிகரித்தது. அதே நேரத்தில் கடந்த சனிக்கிழமை விலையை விட விலை குறைந்து காணப்பட்டது. மாலையில் கிராமுக்கு ₹20 குறைந்து ஒரு கிராம் ₹4,695க்கும், சவரனுக்கு ₹160 குறைந்து ஒரு சவரன் ₹37,560க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி

ஜூலை-01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி