சற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.168 குறைந்து சவரன் ரூ. 40,232-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலையும் போட்டிபோட்டு அதிகரித்து வந்தது. தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தையும் தாண்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர்.இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. எனினும் சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் வாரத்தின் தொடக்க நாளான நேற்று மீண்டும் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. இன்று தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.21 குறைந்து ரூ.5,029க்கும், 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.40,232க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.09க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடந்து ஏறு முகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்திருப்பது நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. …

Related posts

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,520க்கு விற்பனை..!!

நாமக்கல் முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை