சர்வதேச யோகா போட்டி வெண்ணைமலை கொங்கு பள்ளி மாணவி சாதனை

 

கரூர், ஜன. 13: சர்வதேச அளவிலான 29-வதுயோகா போட்டியானது, புதுச்சேரி மாநிலம் காந்தி திடலில் நடைபெற்றது. போட்டியில் 40 நாட்டில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் கரூர் வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 7ம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ கலந்து கொண்டு, 9 முதல் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.

வெற்றி பெற்ற மாணவிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கொங்கு மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் பாலுகுருசுவாமி, பள்ளியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் மற்றும் கொங்கு கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் உதவி தலைமை ஆசிரியர்கள் இருபால் ஆசிரியர்கள் அனைவரும் மாணவியை பாராட்டினர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்