சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 22: கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா பயிற்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், யோகா பயிற்சி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை ஆசிரியர்கள், பல்வேறு வகையான யோகா பயிற்சியை அளித்தனர். முதன்மை மாவட்ட நீதிபதி வசந்தி தலைமையில், மாவட்ட நீதிபதி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி மற்றும் தலைவர், மக்கள் நீதிமன்றம் நாகராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், விரைவு மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுதா, குற்றவியல் நீதிபதி பிரியா, முதன்மை சார்பு நீதிபதி மோஹன்ராஜ், சிறப்பு சார்பு நீதிபதி அஷ்பக் அகமத், குற்றவியல் நீதித்துறை நடுவர் கார்த்திக் ஆசாத், குற்றவியல் நீதித்துறை நடுவர் ஸ்ரீவஸ்தவா, மாவட்ட உரிமையியல் நீதிபதி யுவராஜ், சக்தி நாராயணன், வழக்கறிஞர் சங்க செயலாளர் மற்றும் வழக்கறிஞர்கள், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நீதித்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

சேலம் 11 சிக்னல் கம்பெனி சார்பில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, பாரூர், நாகரசம்பட்டி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த 150 என்.சி.சி., மாணவர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலந்துக்கொண்டனர். இதில், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன், உதவி தலைமை ஆசிரியர் பத்மாவதி உள்பட பலர் பங்கேற்றனர்.

ஓசூர், : ஓசூரில் 9வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான மாணவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று யோகா செய்தனர். இதில் சூரிய நமஸ்காரம், மூச்சு பயிற்சி, வயதானவர்களுக்கு எளிய பயிற்சி, பிராணயாமம் போன்ற பல்வேறு முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. அதே போல் ஓசூர் அபால மனநல காப்பகத்தில் உலக சமுதாய சேவா சங்கம் சார்பாக உத்ரா, புஷ்பா ஆகியோர் முன்னிலையில் யோகா பயிற்சி நடைபெற்றது.

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில் வாத்ஸல்யம் அறகட்டளை சார்பில், பாலகோகுலம் குழந்தைகள் அன்பு இல்லத்தில் மனவளக்கலை மந்தார அறக்கட்டளையின் உறுப்பினர் வரலட்சுமி முன்னிலையில் யோகா பயிற்சி நடைபெற்றது. நிகழ்சியில் வாத்ஸல்யம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கௌதமன் தலைமை தாங்கினர்.
சூளகிரி: சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், உலக யோகா தினம் பள்ளி தலைமை ஆசிரியர் மகாதேவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர். அதேபோல் மருதாண்டப்பள்ளியில் எச்.பி. பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ேயாகா நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் (பொ) சக்திவேல் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை யசோதா முன்னிலை வகித்தார். சிறப்பாக யோகா செய்த மாணவர்களுக்கு ஜேஆர்சி மாணவர்கள் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், முதல்வர் எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் தலைமையில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஊத்தங்கரை வட்டார தலைவர் மருத்துவர் தேவராசு, துணைத்தலைவர் ராஜா, உறுப்பினர் சிவகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆரோக்கிய பாரதி சார்பில் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை, உதவி தலைமை ஆசிரியர் பால்ராஜ், உடற்கல்வி இயக்குனர் சரவணன், ஆரோக்கிய பாரதி அமைப்பின் உறுப்பினர் கௌதம் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில், சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டு சூரிய நமஸ்கார பயிற்சிகளை செய்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்