சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்

கரூர், ஜூன் 27: சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூர் மாநகராட்சி அலுவலகம் முகப்பிலிருந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் முன்னிலை வகித்தார். ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 26 ம் நாள் சர்வதேச போதைப்பொருட்கள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது. மேலும் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் பேரணிகள் மற்றும் கருத்தரங்கங்கள் நடத்தவும், https://pledge.mygov.in/fight https://pledge.mygov.in/fightagainstdrugabuse/ என்ற இணையதளம் முகவரியை பயன்படுத்தி இ-உறுதிமொழி பிரச்சாரம் மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பேரணியில் 400 மேற்பட்ட பள்ளி மாணவ – மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இப்பேரணி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி பழைய அரசு தலைமை மருத்துவமனை, வடக்கு பிரதட்சணம் சாலை, தின்னப்பா கார்னர், மேற்கு பிரதட்சணம் சாலை, ஜவஹர் பஜார் வழியாக கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தை சென்றடைந்தது. பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பிரபாகர், மேயர் வே.கவிதா, மாநகராட்சி ஆணையர் சுதா, வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், உதவி ஆணையர் (கலால்) கருணாகரன், முதன்மை கல்வி அலுவலர் சுமதி மற்றும் துணை மேயர் பா.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு