சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி, வெளியீடுகள் நிறுவனங்களுடன் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெரம்பலூர்,செப்.5: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரிக்கும் சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் (அமெரிக்கா), உலக அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் (இங்கிலாந்து), முனீஸ் ஆராய்ச்சி மையம் (இந்தியா) ஆகிய நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில் “இந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியானது சிறந்த தொலைநோக்கு பார்வையுடன் உலகத்தரம் வாய்ந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

மேலும் இந்த அறிவியல் உலகத்தில் பல புதுமைகளை படைக்க அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட பல வசதிகளையும் வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது என்றார்.இந்நிகழ்ச்சியில் சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் (அமெரிக்கா), உலக அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் (இங்கிலாந்து), முனீஸ் ஆராய்ச்சி மையம் (இந்தியா) ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மனோகரன் மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரி பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் இளங்கோவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், திறன் மேம்பாட்டு அதிகாரி சஷீதா, புலமுதல்வர்கள் அன்பரசன் (அகாடெமிக்), சிவராமன் (ஆராய்ச்சி), மற்றும் ஒருங்கிணைப்பாளர் அன்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை