சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத் தொகையினை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத் தொகையினை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில், கரும்பு சாகுபடிப் பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வந்த சூழ்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைக்கிணங்க கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு, அதிக கரும்பு மகசூலுடன், அதிக சர்க்கரை கட்டுமானமும் தரக்கூடிய கரும்பு இரகங்களை பிரபலப்படுத்துதல், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, சொட்டு நீர் பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள், சர்க்கரை ஆலைகளில் புனரமைப்பு, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இணைமின் திட்டம் 2020-21 அரவைப்பருவத்திற்கு வழங்கப்பட்ட கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை போன்ற பல்வேறு கடந்த 2015-16 முதல் 2019-20 அரவைப்பருவம் வரை கரும்பு விலை உயர்த்தப்படாமல், டன்னுக்கு ரூ. 2750 மட்டுமே வழங்கப்பட்டது. 2020-21 அரவைப்பருவத்திற்கு ஒன்றிய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதாய விலையான (Fair and Remunerative Price) ரூ. 2707.50ஐ விட கூடுதலாக உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.192.50 முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டது. டன்னுக்கு ரூ. 2900 கிடைத்தது. இதனால், கரும்பு விவசாயிகளுக்குகரும்பு சாகுபடிப் பரப்பு அதிகரிப்புகரும்பு 2020-21 விவசாயிகளின் அரவைப்பருவத்தில் நலனுக்காக 95,000 அரசு எக்டராக எடுத்த இருந்த நடவடிக்கைகளினால், கரும்புப் பதிவு, 2022-23 அரவைப்பருவத்தில் 1,40,000 எக்டராகவும், கரும்பு அரவை 98.66 இலட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 139.15 இலட்சம் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது.கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கிடும் வகையில் முதலமைச்சர் கடந்த 07.12.2022 அன்று துவக்கம் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் 2022-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிவித்தவாறு, ஒன்றிய அரசு 2021-22 ஆம் அரவைப்பருவத்திற்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான (Fair and Remunerative Price) ரூ. 2755ஐ-யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கிடும் வகையில், மாநில அரசு ரூ.199 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து வழங்கி வேளாண்மை-உழவர் நலத்துறை ஆணையிட்டது.2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 07.12.2022 அன்று துவக்கி வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து, 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளின் விபரத்தை சேகரித்து, கூர்ந்தாய்வு செய்து, சிறப்பு ஊக்கத்தொகையினை விரைவில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவுவைக்க சர்க்கரைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறப்பு ஊக்கத்தொகையுடன் சேர்த்து டன்னுக்கு ரூ.2,950 கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.199 கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால், பொது, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் 2021-22 அரவைப்பருவத்தில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,950 கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 1.21 இலட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை