சரும பளபளப்புக்கு பரங்கி!

நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி ;பரங்கிக்காய் பரவலாக விளையக்கூடிய ஒரு காய். அமெரிக்கர்கள் அதிகம் விரும்பும் காய்கறிகளில் இதுவும் முக்கியமானது. இதனை மஞ்சள் பூசணி என்றும் அழைப்பார்கள். பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி, பி6, ஃபோலேட், நியாசின், பான்டோதெனிக் அமிலம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் உள்ளன.*காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும். *நார்ச்சத்து, உடல் எடையை குறைக்கவும் இது உதவும். அதிக உடல் எடையை கொண்டவர்களுக்கு இது பெரிதும் உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.*வைட்டமின் ஏ-யின் முன்னோடியான பீட்டா கரோட்டின் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்க உதவுகிறது. *சரும புண்களை ஆற்றி, சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கவும், தழும்புகளை மறைக்கவும் உதவுகிறது.*சளி மற்றும் காய்ச்சலை போக்குகிறது. ஒரு கப் பரங்கிக்காயில் 11 மி.கி. வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் வைட்டமின் சி-யில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மைகள் இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.*பரங்கிக்காயில் வைட்டமின் பி6 அதிகம் உள்ளதால், உடலின் பல வித அலர்ஜிகளைக் குணப்படுத்த உதவுகின்றது.*இதில் இரும்புச்சத்து மிகுந்து காணப்படுவதால், ரத்த சோகை, தலை சுற்றல், உடல் சோர்வு ஆகியவற்றிற்கு அருமருந்தாக செயல்படுகிறது.*பரங்கிக்காயில் வைட்டமின் ‘ஏ’ ஏராளமாக இருப்பதால், கண்களை பொலிவுடன் வைத்துக் கொள்ள உதவுகின்றது.*பரங்கிக்காய், ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரித்து, நோய்த்தொற்றுகளை வரவிடாமல் தடுக்கிறது.*இதில் வைட்டமின் ‘ஈ’, துத்தநாகம் மற்றும் மக்னீசியம் ஆகியன சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.*பரங்கிக்காய் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். *இது உடல் சூட்டை நீக்கி, பசியைத் தூண்டி விடும். சிறுநீர் பெருகும்.-ஆர்.பிரசன்னா, திருச்சி.தொகுப்பு: லதானந்த்

Related posts

படிகாரத்தின் மருத்துவ குணங்கள்

கண் நோய்களை குணமாக்கும் அவரைக்காய்!

எடையும் குடைமிளகாயும்!