சரித்திரி பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை!: 454 குற்றவாளிகளை கண்காணித்து அறிவுரை..!!

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சரித்திரி பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில், 454 குற்றவாளிகள் கண்காணித்து, 10 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா சென்னை நகரமாக மாற்ற Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சரித்திரி பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றப்பின்னணி நபர்களுக்கு எதிரான ஒரு சிறப்பு தணிக்கை உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று  சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றப்பின்னணி நபர்களுக்கு எதிரான DARE சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.இச்சோதனையில், நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்த 454 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கண்காணித்தும், நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆகவே, சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு வருவதால், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  எச்சரித்துள்ளார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்