சரஸ்வதி அலங்காரத்தில் மாரியம்மன் வீதி உலா

ஊட்டி, ஏப். 12: ஊட்டி மாரியம்மன் நேற்று சரஸ்வதி அம்மன் அலங்காரத்தில், கேடயம் வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார். ஊட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் ஒரு மாதகாலம் வெகு விமரிசியாக கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவின் போது, நாள் தோறும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா வருவது வழக்கம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் இந்த வீதி உலா (தேர் பவனி) நடத்தப்படுகிறது. இந்நிலையில், இம்முறை கடந்த மாதம் 17ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் கோயில் திருவிழா துவங்கியது.

20ம் தேதி முதல் அம்மனை அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனத்திலும், அலங்காரத்தில் வீதி உலா அழைத்து வருகின்றனர். நேற்று மாரியம்மன் சரஸ்வதி அம்மன் அலங்காரத்தில், கேடயம் வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார். மாரியம்மன் கோயிலில் துவங்கிய வீதி உலா கமர்சியல் சாலை, காபி அவுஸ், லோயர் பஜார் மற்றும் மெயின் பஜார் வழியாக தேர்பவனி வந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு