சரள்மண் கடத்திய லாரி பறிமுதல்

வைகுண்டம், ஆக.19: வைகுண்டம் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி ராஜ் தலைமையில் சாந்தகுமார் மற்றும் அந்தோணி ராஜ் உள்ளிட்ட போலீசார் மீனாட்சிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கிடைத்த தகவலின் பேரில் அங்குள்ள கோந்தன்குறிச்சி குளத்திலிருந்து ரோட்டிற்கு வந்த டிப்பர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். சுமார் மூன்று யூனிட் அளவிலான குளத்து மண் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே மீனாட்சிபட்டி  மூலக்கரை கோந்தன்குறிச்சி குளத்திலிருந்து சரள் மண் அத்துமீறி அள்ளப்படுவதாகவும், இது குறித்து நடவடிக்ைக எடுக்க வேண்டும் எனவும் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா, வைகுண்டம் தாசில்தார் சிவகுமாரிடம் மனு கொடுத்துள்ளார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு