சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றியதாக 1.94 லட்சம் அபராதம் வசூல்

சென்னை:  தமிழகத்தில் வரும் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. குறைந்த நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு செல்லும் போது போக்குவரத்து விதிகளுக்கு மாறாக சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஏற்றப்படுகின்றனர். இவ்வாறு பொதுமக்களை அழைத்துச்செல்லக்கூடாது என போக்குவரத்துத்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் பொதுமக்களை ஏற்றியதாக 116 சரக்கு வாகனங்கள் சிக்கின. அவர்களிடமிருந்து 1.94 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவதாக புகார் வந்தது. இதையடுத்து கடந்த 8ம் தேதி முதல் 28ம் தேதி வரை மேற்கொண்ட ஆய்வில் 116 வாகனங்கள் சிக்கின. அவர்களிடமிருந்து 1,94,400 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

மனைவியை நிர்வாண படம் எடுத்து விபசாரத்தில் தள்ளிய கணவன் கைது: பரபரப்பு வாக்குமூலம்

பூரி கட்டையால் மூதாட்டியை தாக்கி 50 பவுன் கொள்ளையடித்த 7 பேர் கும்பல் கைது

டெல்லியில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் லஞ்ச வழக்கில் கைது!!