சரக்கு ரயில் பெட்டிகள் இணைக்கும் பணி ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நீடாமங்கலம், ஆக. 4: நீடாமங்கலத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் இணைக்கும் பணி நடைபெற்றதால் கேட் மூடப்பட்டது. இதனால் நெடுஞ்சாலையில் ஒரு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீடாமங்கலத்தில் சிமெண்ட் இறக்கிய காலிப்பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரயில் தஞ்சாவூர் நோக்கி செல்ல சரக்கு ரயில் பெட்டிகள் இணைக்கும் பணி நேற்று அதிகாலை தொடங்கியது.இதற்காக அதிகாலை சுமார் 4.15 மணிக்கு ரயில்வேகேட் மூடப்பட்டது.

இதனிடையே காரைக்காலிலிருந்து நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயில் போக்குவரத்தும்,சென்னையிலிருந்து மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் போக்கு வரத்தும் நடந்தது. சரக்கு ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடுகளை சீர்செய்வதற்காக இடையில் சில நிமிடங்கள் ரயில்வே கேட் திறந்து விடப்பட்டு மீண்டும் கேட் மூடப்பட்டது. பின்னர் காலிப்பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு காலை 5.30 மணியளவில் தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டுச் சென்றது.அதன் பின் ரயில்வேகேட் மீண்டும் திறக்கப்பட்டு நெடுஞ்சாலை வாகனங்கள் புறப்பட்டுச்சென்றது. இதனால் சுமார் ஒருமணி நேரம் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை