சரக்கு ரயில் தடம் புரண்டது: 125 ரயில்களின் சேவை பாதிப்பு

மித்னாபூர்: உத்தரபிரதேச மாநிலம் மித்னாபூர் ரயில்வே கிராசிங் வழியாக 34 வேகன்களுடன் (சரக்கு ரயில் பெட்டி) ரயில் சென்று கொண்டிருந்த போது, ​​ஒரு வேகனில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. அப்போது வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள், வேகனில் ஏற்பட்ட சத்தம் குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் அந்த ரயில் ராம்வான் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, அதன் இன்ஜின் மற்றும் நான்கு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இதனால் மற்ற வேகன்கள் பலத்த சத்தத்துடன் ஒன்றின் மீது ஒன்றாக ஏறி நின்றன. கிட்டதட்ட ஏழு வேகன்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால் டெல்லி – ஹவுரா, கான்பூர் – பிரயாக்ராஜ் இடையே ெசல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் இவ்வழியாக செல்லும் 48 மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நியூ சுஜாத்பூரில் இருந்து இயக்கப்பட்டன. இதனால் ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக ரயில்கள் சென்றடைந்தன. குறிப்பாக டெல்லி-ஹவுரா வழித்தடத்தில் செல்லும் 125 ரயில்களின் இயக்கம் தடைபட்டதால், மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. சரக்கு ரயில் விபத்து குறித்து விசாரிக்கப்படுகிறது….

Related posts

அரசியல் அமைப்பை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனில்லை : பிரதமர் மோடியை தாக்கிய ராகுல் காந்தி

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு