சமையல் காஸ் விலையில் மாற்றமில்லை வர்த்தக சிலிண்டர் விலை ரூ.37 குறைப்பு

சேலம்: நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.37 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையும், காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. காஸ் சிலிண்டர் விலையை பொருத்தளவில், நடப்பாண்டில் கடந்த மார்ச் 22ம் தேதி வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50ம், மே 7ம் தேதி ரூ.50ம், மே 19ம் தேதி ரூ.3ம், ஜூலை 6ம் தேதி ரூ.50ம் அதிகரிக்கப் பட்டது. இதனால், நாடு முழுவதும் சராசரியாக சிலிண்டர் விலை ரூ.1,050க்கு மேல் சென்றது.அதிலும் கடந்த மாதம் 6ம் தேதி ரூ.50 விலையேற்றப்பட்டவுடன், வரலாறு காணாத புதிய உச்சமாக வீட்டு உபயோக காஸ் கிலிண்டர் விலை சென்னையில் ரூ.1,068.50 ஆக உயர்ந்தது. இவ்விலையேற்றத்திற்கு அரசியல் கட்சிகள், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (ஆகஸ்ட்) புதிய விலையை இன்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில், 14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப் படவில்லை. கடந்த மாத விலையில் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால், சென்னையில் ரூ.1,068.50 ஆக நீடிக்கிறது. 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை நடப்பு மாதத்திற்கு ரூ.37 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ரூ.2,177.50ல் இருந்து ரூ.36.50 குறைந்து ரூ.2,141 ஆக இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் 125 டாலருக்கு மேல் விற்கப் பட்ட நிலையில், 100 டாலர் என்ற நிலைக்கு இறங்கி வந்திருக்கிறது. ஆனாலும், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு குறைக்காமல், கடந்த மாத விலையில் நீடிக்கச் செய்திருக்கிறது….

Related posts

மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.! கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

காஞ்சிபுரம் அருகே மாட்டுத்தொழுவமாக மாறிய நூலகம்: அதிகாரிகள் கவனிப்பார்களா?