சமையல் எரிவாயு விலை கடந்த 7 மாதங்களில் மட்டும் ரூ.240 உயர்வு : இல்லத்தரசிகள் கண்டனம்!!

சென்னை : சமையல் எரிவாயு விலை கடந்த 7 மாதங்களில் மட்டும் ரூ.240 உயர்த்தப்பட்டு இருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை ரூ. 610 ஆக இருந்த சமையல் எரிவாயு விலை, டிசம்பர் 2ம் தேதி அன்று 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. 13 நாட்கள் இடைவெளியில் டிசம்பர் 15ம் தேதி அன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டதை அடுத்து, எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 710 ஆக அதிகரித்தது. ஜனவரி மாதம் முழுவதும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், பிப்ரவரி மாதம் மட்டும் 3 முறை விலை உயர்த்தப்பட்டது. பிப்ரவரி 4ம் தேதி அன்று 25 ரூபாய் அதிகரித்து, சிலிண்டர் விலை ரூ. 735ஆக விற்பனை செய்யப்பட்டது. அதே மாதத்தில் 15ம் தேதி அன்று மேலும் ரூ. 50 உயர்த்தப்பட்டு, ரூ. 785க்கு விற்பனையானது. பிப்ரவரி 15ம் தேதி அன்று கேஸ் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இதற்கு எதிரான குரல்கள் வலுக்கத் தொடங்கிய நிலையில்,அடுத்த 4 நாட்களில் மீண்டும் கேஸ் விலை உயர்ந்தது. மார்ச் 1ம் தேதி அன்று சிலிண்டருக்கு மேலும் ரூ. 25ஐ உயர்த்தி ரூ. 835க்கு விற்பனை ஆனது. இதனையடுத்து எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, கடந்த ஏப்ரல் 1ம் தேதி கேஸ் சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 3 மாதங்களாக விலை உயர்த்தப்படாத நிலையில், தற்போது சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.25 உயர்ந்து ரூ. 850க்கு விற்பனை ஆகிறது. …

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை