சமூக வலைதளங்களில் நீதிபதிகள் பற்றி அவதூறு 5 பேரை தூக்கியது சிபிஐ: 16 பேர் மீது வழக்குப் பதிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதியை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் நீதிபதி வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி என்வி ரமணா விசாரித்தார். அப்போது அவர், ‘நீதிபதிகளுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக மிரட்டல் விடப்படுகிறது. நீதிபதிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த மிரட்டல்கள் குறித்து சிபிஐ, உளவுப் பிரிவுகள் கூட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது,’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், ‘சமூக வலைதளங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று ஆந்திர உயர் நீதிமன்றம் உத்ரதவிட்டது. இது குறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் ஆர்சி ஜோசி கூறுகையில், ‘‘நீதிபதிகள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டது தொடர்பாக 16 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதில், 13 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். 3 பேர் வெளிநாடுகளில் உள்ளனர். இதுவரை 13 பேரில் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது,’’ என்றார்….

Related posts

தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை: சித்தராமையா இன்று அவசர ஆலோசனை

“என்னை காண ஆதாருடன் வரவும்”- கங்கனா நிபந்தனை

போதைப்பொருள் வழக்கு: ஜாஃபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கியது டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்