சமூக நீதிக்காகத்தான் அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்திருக்கிறது: கீழ்பென்னாத்தூரில் அன்புமணி பிரசாரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து மல்லவாடி கிராமத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- இந்த தேர்தல் பாமகவுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். சமூக நீதிக்காகத்தான் இந்த தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்து இருக்கிறது. அனைத்து சமுதாயத்தினரும் முன்னுக்கு வரவேண்டும். அந்த அடிப்படையில்தான், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ராமதாஸ் பெற்றுத் தந்தார். அதை கொடுத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதுதான் சமத்துவம், சமூக நீதி. இது சாதி பிரச்னை இல்லை. சமூக பிரச்னை. வன்னியர்களைபோல பல சமுதாயத்தினர் பின்தங்கி உள்ளனர். அவர்களுக்கும் தனித்தனியே இட ஒதுக்கீடு பெற்றுத் தருவோம். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்திருக்கிறது என்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கிறார். எனவே, அவர் மீண்டும் 5 ஆண்டுகள் முதலமைச்சராக வரவேண்டும்.  இவ்வாறு அன்புமணி பேசினார். …

Related posts

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு

அதிமுக பகுதி செயலாளர் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்