சமாஜ்வாதி கட்சி தலைவர் மீது ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் வழக்கு

லக்னோ: எட்டாவா சிறையில் இருந்து வெளியே வந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் கொரோனா விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியின் யவ்ஜன் சபா தலைவர் அவுரியா தர்மேந்திர யாதவ் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. சிவில் லைன்ஸ் போலீசார், இவரை ரவுடி சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று அவர் எட்டாவா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  இவர் விடுதலையாகி வருவதை அறிந்த அவரது ஆதாரவாளர்கள் சிறை வளாகத்தின் முன் குவித்தனர். சில மணி நேரங்களில் அவுரியா சிறையில் இருந்து வெளியே வந்த போது, அவருக்கு ஆதரவாளர்கள் கும்பலாக சேர்ந்து கோஷமிட்டனர். தொடர்ந்து கொரோனா நெறிமுறைகளை மீறி ஊர்வலம் மேற்கொண்டதற்காக, பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் அவுரியா தர்மேந்திர யாதவ் மற்றும் 200 பேர் மீது போலீசார் வழக்கபதிந்துள்ளனர். இதுகுறித்து, எஸ்பி பிரிகேஷ் குமார் கூறுகையில், ‘சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவுரியா தர்மேந்திர யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொரோனா நெறிமுறைகளை மீறி ஏராளமான வாகனங்களுடன் எட்டாவா-அவுரியா நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்றனர். அதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது’ என்றார். …

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து