சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3 நாளில் 130 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு: துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பணிகள் விறுவிறுப்பு

சமயபுரம், செப்.12: சக்தி தலங்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் முதன்மையாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு தங்களால் இயன்ற பொன் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துவார்கள். அப்படி செலுத்தப்படும் காணிக்கைகளை மாதம்தோறும் இருமுறை எண்ணப்பட்டு பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோயில் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இந்நிலையில் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகள் அதனை சரிபார்த்து சொக்க தங்கமாக மாற்றி அனைத்தும் மொத்தமாக மும்பையில் உள்ள ஸ்டேட் பேங்க் வங்கியில் டெபாசிட் செய்வது வழக்கம்.

அதன்படி கடந்த செப்.9 தேதி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு தலைமையில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ரவிசந்திரபாபு மற்றும் மாலா ஆகியோர் முன்னிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாகவும், காணிக்கையாகவும் வரப்பெற்ற மொத்தம் 365 கிலோ தங்க நகைகளை சரிபார்ப்பு பணி தொடங்கியது. இப்பணியில் இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழுத் தலைவர் இளங்கோவன், அறங்காவலர்கள் மற்றும் அறங்காவலர் உறுப்பினர்கள் பிச்சைமணி, சுகந்தி ராஜசேகர் சேதுலெட்சுமணன், இந்து சமய அறநிலையத்துறை மூன்று மண்டலம் துணை ஆணையர் மற்றும் சரிபார்ப்பு அலுவலர்கள் முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பணிகள் தொடங்கியது.

Related posts

காரிமங்கலம் சந்தையில் கால்நடை விற்பனை மந்தம்

சாலை விரிவாக்க பணி ஆய்வு

குப்பை கொட்டும் இடத்தில் நின்றிருந்த கார் தீயில் எரிந்து நாசம்