சபரிமலையில் ஓணம் பூஜை: பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஓணம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 6ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள்  முதல் ஓணம் சிறப்பு பூஜைகள் தொடங்கின. நேற்று திருவோணம் பண்டிகை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்திருந்தனர். கோயில் முன் அத்தப்பூக்கோலமும் போடப்பட்டிருந்தது. தரிசனத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஓண விருந்து வழங்கப்பட்டது. அஷ்டாபிஷேகம், கலசாபிஷேகம், களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகளும் நடந்தன. நாளை (10ம் தேதி) வரை கோயில் நடை திறந்திருக்கும். நாளை இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். நாளையுடன் ஓணம் சிறப்பு பூஜைகள் நிறைவடையும். மீண்டும் ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும்….

Related posts

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: பிரதமர் மோடி, ஒன்றிய கல்வி அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்