சந்து கடையில் மது விற்ற 5பேர் கைது

ஓமலூர், ஜூன் 27: ஓமலூர் காவல் நிலைய பகுதிகளில், சட்டவிரோதமாக சந்துகடை மூலம் கலப்பட மது பானம் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஓமலூர் போலீஸ் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் உத்தரவின் பேரில், ஓமலூர் இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசாரும், டி.எஸ்.பி குற்றபிரிவு போலீசாரும், நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். கூலி வேலை செய்பவர்களை போல போலீசார் சென்று, மது வாங்குவதை போல நடித்து, சந்து கடையில் மது விற்பனை செய்த புளியம்பட்டியை சேர்ந்த கோவிந்தன், கருத்தானுர் ஈஸ்வரன், காமலாபுரம் மாதையன், ஓமலூர் தங்கராஜ், சுந்தரவடிவேல் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள், ₹6ஆயிரம் பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்