சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்க நாகை விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்,ஆக.23: நாகப்பட்டினம் நகர பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றிய போது நகராட்சிக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான இடத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
நாகப்பட்டினம் நகர பகுதியை அழகுபடுத்தும் வகையில் நகராட்சி ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் புதிய ஆர்ச் முதல் நாகூர் வெட்டாறு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. நகரமைப்பு அலுவலர்கள் நாகராஜன், காஜாமொய்தீன் ஆகியோர் தலைமையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு நகர பகுதியில் ஆக்கிரமிப்பு செய்திருந்த இடங்களை அகற்றினர்.

இந்நிலையில் நாகப்பட்டினம் அபிராமிஅம்மன் சன்னதி தெருவில் நாகப்பட்டினம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்திருப்பது ஆக்கிரமிப்பு அகற்றும் போது தெரியவந்தது. இதையடுத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றினர். ஆக்கிரமிப்புகள் அகற்றியவுடன் நாகப்பட்டினம் நகர பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கும், ஒருவழிபாதையாக மாற்றுவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. அதே போல் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பூங்காக்கள் அமைத்து நகராட்சியை அழகுபடுத்த திட்டம் வகுக்கப்படவுள்ளது.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு