சந்திரயான் 3 வெற்றி கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இலவச பேருந்து பயணம்

 

தஞ்சாவூர், ஆக. 25: சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று முன்தினம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதை கொண்டாடும் வகையில் தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு இலவச பேருந்து பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .

சந்திரயான் 3ஐ குறிக்கும் வகையில் 3 இடங்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம், மாரியம்மன் கோவில், நாஞ்சிக்கோட்டை ஆகிய இடங்களுக்கு இரவு 9 மணி வரை மொத்தம் 26 முறை இந்த இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் பயணிகளுக்கு இனிப்பும், தேசியக்கொடியும் வழங்கப்பட்டது.

சந்திராயன் 3 வெற்றியுடன் கூடுதல் கொண்டாட்டமாக இலவச பேருந்து பயணமும் கிடைத்ததையடுத்து தஞ்சாவூர் நகர பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் தலைமையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு