சந்தியாகப்பர் ஆலய தேர்ப்பவனி

 

சாயல்குடி, ஜூலை 28: மூக்கையூர் மற்றும் சவேரியார்பட்டிணம் தேவாலய திருவிழாவை முன்னிட்டு தேர்ப்பவனி நடந்தது. சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் புனித சந்தியாகப்பர் தேவாலயம் மற்றும் கடலாடி அருகே சவேரியார்பட்டிணம் சந்தியாகப்பர் தேவாலயம் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் சிறப்பு திருப்பலி மற்றும் பொது ஜெபம், கூட்டு பிரார்த்தனை நடந்தது. பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பங்கு தந்தைகளின் மறையுரை நடந்தது.

நேற்று முன்தினம் மாலையில் திறந்த வெளியில் சிறப்பு திருப்பலி மற்றும் மறையுரை நடத்தப்பட்டு இரவில் சந்தியாகப்பர் தேரில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மூக்கையூர் மற்றும் சவேரியார்பட்டிணம் வீதியில் தேர்பவனி நடந்தது.கிராம மக்கள் வரவேற்று மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றியும் பிரார்த்தனை செய்தனர். விழாவில் சாயல்குடி, கடலாடி, கமுதி, ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், அக்காள்மடம், மூக்கையூர், ரோச்மா நகர், வேம்பார் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமமக்கள் கலந்து கொண்டனர். நேற்று கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு