சந்தவாசல் அருகே பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கண்ணமங்கலம், ஏப்.17: சந்தவாசல் அருகே வெள்ளூர் பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சந்தவாசல் அடுத்த வெள்ளூர் கமண்டல நதி தென்கரையில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி, லட்சுமி, ேகா பூஜை, விக்னேஷ்வர பூைஜ, யாகசாலை பூைஜ, தம்பதி சங்கல்பம் உள்ளிட்ட பல்ேவறு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து, கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் கோபுர கலசம் மற்றும் மூலவர் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட பூபல்லக்கில் வாணவேடிக்கை, பேண்டு வாத்தியங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்