சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

விருதுநகர்/ஸ்ரீவில்லி, ஜூலை 6: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் ஜெயலட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சமூக தணிக்கையை கைவிட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பிற சங்க நிர்வாகிகள் ஈஸ்வரன், நடராஜன், கண்ணன் உள்பட பலர் பேசினர். சத்துணவு ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.

இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள யூனியன் அலுவலகம் நுழைவாயிலில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க கிளை தலைவர் மின்னல் கொடி தலைமை வகித்தார். செயலாளர் தேவி வரவேற்று பேசினார். கோரிக்கையை விளக்கி மாவட்ட தலைவர் செல்வராஜ் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த வெண்மணி பேசினார்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்