சத்திரம் ஜாரி பகுதியில் வசிக்கும் 500 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ கோரிக்கை

திருவள்ளூர்: சட்டப்பேரவையில் தொகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசினார். அப்போது திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, சத்திரம் ஜாரி பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 60 ஆண்டு காலத்திற்கும் மேலாக நிரந்தரமாக வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு இது நாள் வரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆட்சியில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, சத்திரம் ஜாரி பகுதியில் 60 ஆண்டு காலத்திற்கும் மேலாக வசித்து வரும் சுமார் 500 குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கேட்ட பகுதி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பெல்ட் பகுதி என தெரிய வருகிறது. நீதிமன்றத்திலும் உரிய ஆணைகள் உள்ளன. எனவே உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என தெரிவித்தார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை