சத்தியமங்கலம் முகமதியர் துவக்கப்பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

 

சத்தியமங்கலம், ஜூன் 25: தீயணைப்பு மீட்பு பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பள்ளியில் தீப்பிடித்தால் வகுப்பறைகளில் இருந்து குழந்தைகளை எப்படி வெளியேற்றுவது என்பது குறித்து சத்தியமங்கலம் முகமதியர் துவக்கப்பள்ளியில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கராஜன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் பள்ளி வகுப்பறையில் தீ விபத்து ஏற்படும்போது பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாக வெளியேற்றுவது தீயை அணைப்பது குறித்து தத்ரூபமாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சி பள்ளி குழந்தைகள் முன் செய்து காண்பிக்கப்பட்டதால் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. மேலும் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீரால் நனைந்த சாக்குப்பையை போட்டு அணைப்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சத்தியமங்கலம் தீயணைப்புத்துறையினருக்கு பொதுமக்கள், பெற்றோர்கள் தரப்பில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு