சத்தியமங்கலம், கொமாரபாளையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

 

சத்தியமங்கலம், மார்ச் 4: போலியோ நோயை முற்றிலும் தடுக்கும் விதமாக தமிழக அரசின் உத்தரவின் பேரில் நோய் தடுப்பு மற்றும் மருத்துவ துறை சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று தீவிர போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள தாய்சேய் நல விடுதியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் கதிர்வேல், சுகாதார அலுவலர் சக்திவேல், நகர் மன்ற உறுப்பினர்கள், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ஆனைக்கொம்பு ஸ்ரீராம், கோபு, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், காமதேனு பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கொமாரபாளையம் ஊராட்சியில் உள்ள எம்ஜிஆர் நகர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தொடங்கி வைத்தார். மேலும் சொட்டு மருந்து போடுவதற்காக வந்த அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் ரங்கராஜ், வடிவேலு, சாவித்திரி, வளர்ச்சி குழு உறுப்பினர் ராசு, செயலாளர் யுவராஜ் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை