சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு 2வது நாளாக பக்தர்கள் வருகை

வத்திராயிருப்பு, ஏப். 5: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை பவுர்ணமி தலா மூன்று நாட்கள், பிரதோசத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த ஏப்.4 தேதியிலிருந்து ஏப்.6ம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 ம் நாளான நேற்று சென்னை கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பல்வேறு வாகனங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். நேற்று காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால் பழம் பன்னீ்ர் இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிசேகங்கள் நடைபெற்றது. அபிசேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கினர். மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு