சதுரகிரியில் 2 மணி நேரம் கனமழை: ஓடைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

வத்திராயிருப்பு: சதுரகிரியில் நேற்று மாலை 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் ஓடைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இங்கு மாதத்திற்கு 7 நாட்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழந்து சுமார் 5 மணிக்கு பிறகு சதுரகிரி கோயில் பகுதியில் இடைவிடாமல் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாணிப்பாறை வழுக்கல் அருவி வழியாக, கல்லணையாற்று பாலத்தில் சென்ற வெள்ளநீரை அப்பகுதி பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். மேலும் கனமழையால் லிங்கம் கோயில் ஓடை பகுதியில் அளவுக்கு அதிகமான வெள்ளநீர் பாலத்தை தொட்டு சென்றது. இதனால் அப்பகுதிக்கு நேற்று இரவு பொதுமக்கள் செல்லக்கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்….

Related posts

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!