சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் விழிப்புணர்வு முகாம்

வேதாரண்யம் மே 4: வேதாரண்யம் தாலுகா செம்போடையில்சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்தும் இலவச பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.கூட்டத்திற்கு சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில பொதுச்செயலாளர் அருள் முருகானந்தம்தலைமை வகித்தார்கூட்டத்தில் நீதிமன்ற வழக்குகள் மற்றும் நடைமுறைகளை எதிர்கொள்ளுவது எப்படி?, காவல்நிலைய நடைமுறைகளை கையாளுவது எப்படி? அரசு அலுவலகங்களின் அலைக்கழிப்புகளை தவிர்ப்பது எப்படி, தகவல் உரிமைசட்டம் மூலம் இலவசமாகவும், விரைவாகவும் பட்டா, குடும்ப அட்டை, மின் இணைப்பு, வங்கிகடன், அரசு துறை சான்றிதழ்கள் பெறுவது எப்படி, அடிப்படை பிரச்னைகளுக்கு புகார் அளிப்பது எப்படி, உங்கள் புகார்களுக்கு யாரெல்லாம் பொறுப்பு, அவர்களின் மேலதிகாரிகளுக்கு புகாரளிப்பது எப்படி, சமூக வலைதளங்களை பயன்படுத்தி புகார் அளிப்பது எப்படி, அரசியல் கட்சிகளை கடந்து சிறந்த சமூக ஆர்வலராக செயல்படுவது எப்படி போன்ற விழிப்புணர்வு குறித்து பேசினர்.

விழாவில் மாநில அமைப்பு செயலாளர் கங்காதுரை, நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், தலைஞாயிறு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், கீழையூர் ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன், வேதாரண்யம் பேரூராட்சி பொறுப்பாளர் நந்தகுமார் மற்றும் அகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை