சட்டம், ஒழுங்கு சீர்குலைய வாக்காளர் பட்டியல் குளறுபடியே காரணம்!: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் உள்ளன; அதனை சீர் செய்ய வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அனைத்து கட்சி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உட்பட 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க திமுக எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எதிர்ப்பு தெரிவித்தார். கூட்டத்தில் பங்கேற்ற பின் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை களைய திமுக வலியுறுத்தியுள்ளது. சட்டம், ஒழுங்கு சீர்குலைய வாக்காளர் பட்டியல் குளறுபடியே காரணம். முழுமையான வாக்காளர் பட்டியலை தயாரிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். ஆதார் எண் தவிர 11 ஆவணங்களை இணைக்கலாம் என கருத்து தெரிவித்தார். ஆதார் அட்டையை இணைப்பதில் உடன்பாடில்லை என ஆலோசனை கூட்டத்தில் கருத்து தெரிவித்ததாகவும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை