சட்டப்பேரவையில் 16வது படமாக கலைஞர் படம் திறப்பு

சென்னை: தமிழக பேரவையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் படத்தை நேற்று
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். கலைஞர்
திருவுருவப்படம் திறப்பதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் உள்ள தலைவர்கள்
படங்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை
மண்டபத்தில் முதன் முதலாக, 1948ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி மகாத்மா
காந்தியின் உருவப்படம் திறக்கப்பட்டது. இதை ராஜாஜி திறந்து வைத்தார்.
இதன்பின் அடுத்த ஒரே மாதத்தில், 23-8-1948 அன்று உயிருடன் இருந்த நிலையில்
ராஜாஜியின் உருவப்படம் திறக்கப்பட்டது. அடுத்து 1964ம் ஆண்டு
திருவள்ளுவரின் படம் திறக்கப்பட்டது. பின் அண்ணா உருவப்படத்தை
1969ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார்.
அடுத்து, எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 5 தலைவர்களின் படங்களை
திறக்கப்பட்டது. முதல்வர் காமராஜரின் உருவப்படத்தை 1977ம் ஆண்டு ஆகஸ்ட்
18ம் தேதி குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி திறந்தார். 1980ல் தந்தை
பெரியார், அம்பேத்கர், பசும்பொன்முத்துராமலிங்க தேவர், காயிதே மில்லத்
ஆகியோரின் உருவப் படங்கள் திறக்கப்பட்டது.  மேலும் பல்வேறு காலகட்டங்களில்
பல படங்கள் திறக்கப்பட்டது. தற்போது சட்டப்பேரவையில் 16வது படமாக மறைந்த
முதல்வர் கலைஞர் படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து
வைத்தார். கலைஞரின் திருவுருவ படத்தின் கீழ், ‘‘காலம் பொன் போன்றது… கடமை
கண் போன்றது” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.* கலைஞர் படத்தின் சிறப்புசட்டப்பேரவையில்
நேற்று கலைஞர் திருவுருவப்படம் திறக்கப்பட்டது. மஞ்சள் நிற துண்டை
அணிந்துகொண்டு யானை சிலையின் மீது கலைஞர் கைவைத்து சிரித்தபடி நிற்பது போல்
இந்த படம் அமைந்துள்ளது. கலைஞருக்கு பின்னால் திருவள்ளுவரின் படம் உள்ளது.
இதேபோல், ஏராளமான நூல்கள் அடங்கிய புத்தக அலமாரி ஒன்றும் உள்ளது….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு