ராமநாதபுரம், ஏப்.11: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் மானியக் கோரிக்கைகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை மற்றும் அறிவிக்கும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புதிய பஸ் ஸ்டாண்டில் பெரிய எல்.இ.டி திரையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதில் முதலமைச்சரின் உரை, சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் கேள்வி, அமைச்சர்களின் பதில் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொண்டனர்.
சட்டபேரவை நிகழ்வினை எல்.இ.டி திரையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,வியாபாரிகள்,பயணிகள் பார்வையிட்டனர்.