சசிகலா விடுதலையாகி வெளியே வருவதால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது : ஜி.கே.வாசன் பேட்டி

டெல்லி : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கூறியதுபோல் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘டெல்லி தமிழ் அகாடமி துவக்கிய மாநில அரசுக்கும், துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட என்.ராஜாவுக்கும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் இடைத்தரகர்கள் குளிர்காய நினைக்கிறார்கள். இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக பேசுவார் என நம்புகிறேன்.இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படாத அளவிற்கு சட்ட விதிமுறைகளை நிரந்தரமாக கொண்டு வரவேண்டும்மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலை பொருத்தமட்டில் அதிமுக கூட்டணியில் தான் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளது.குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது போன்று எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர். அதில் எங்களுக்கும் முழு உடன்பாடு உண்டு. இதைத்தொடர்ந்து தேர்தல் நெருங்கும் போது நாங்கள் எத்தனை இடங்களில் போட்டியிடுவோம் என்பது குறித்து தெரிவிக்கப்படும். இதில் அரசு மருத்துவமனை சாக்கடை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியது வருத்தம் அளிக்கிறது. அரசு குறித்து விமர்சிக்க அவருக்கு உரிமை இருக்கிறது. அதற்காக இப்படி பேசுவது என்பது ஏற்கத்தக்கது கிடையாது. தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தல் நெருங்குவதால் அதிமுக கூட்டணி மிகவும் வலுவாகி வருகிறது. அதேப்போல் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா விடுதலையாகி வெளியே வருவதால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்